'கொரோனா' தடுப்பு நடவடிக்கை; கவர்னர்களுக்கு ஜனாதிபதி கோரிக்கை

புதுடில்லி: 'கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளில், செஞ்சிலுவை சங்கம் மற்றும் இதர அமைப்பினருடன், கவர்னர்கள் இணைந்து செயல்பட வேண்டும்' என, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.