ஊரடங்கு உத்தரவால், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, அனைத்த மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக ஆலோசனை நடத்தினார். இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடும் பங்கேற்றார்.
அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், செஞ்சிலுவை சங்கம் மற்றும் மத அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்படி, கவர்னர்களுக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தினார். இவ்வாறு, அவர் கூறினார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடும்படி, அனைத்து மாநில கவர்னர்களுக்கு, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடுவும் அறிவுறுத்திஉள்ளார்.